---Advertisement---

கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

By Sri
Published on: April 7, 2020
---Advertisement---

அரியலூரைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த பெண்ணுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வந்துள்ளார் அரியலூரைச் சேர்ந்த அந்த பெண். கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகமாவதை அடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அரியலூருக்குத் திரும்பியுள்ளார். அங்கே அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அவர் பணியாற்றிய பீனிக்ஸ் மால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிகளில் வந்து சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்த 3200 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் இப்போது அந்த 3200 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!