விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என மாஸ்டர் மகேந்திரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா ஊரடங்குக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். அதில் ஆர்வமான ரசிகர் ஒருவர் இந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் சமூக வலைதளத்தில் டிரைலர் அப்டேட் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மகேந்திரன் ’செல்லக்குட்டி… நானும் உன்ன மாரி வெயிட்டிங்தான். டீசர் அல்லது டிரெய்லர் ரிலிஸ் பண்ணா நல்லா இருக்கும். கவலைப்படாதீங்க, ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் ஒரு நல்ல அப்டேட் வெளிவரும்’ எனக் கூறினார். அவருன் இந்த டிவீட்டை வைத்து ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் என செய்திகள் பரவ, பதறிப்போன மகேந்திரன் மீண்டும் ஒரு டிவிட் மூலம் ‘எப்பா ராசா, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுல்ல, அந்த ஒரு கணக்குல நானா சொன்னேன், ஒரு ரசிகனா உங்களை மாதிரி நானும் வெயிட் பண்ணிட்டுதான் இருக்கேன். மத்தபடி எனக்கு ஒண்ணுமே தெரியாது’ எனக் கையை விரித்துள்ளார்.









