---Advertisement---

ஐபிஎல் 2020: இந்திய வீரர்கள் மட்டும் விளையாடலாம்! ராஜஸ்தான் அணியின் புதிய யோசனை!

By Sri
Published on: April 3, 2020
vivi ipl 2019
---Advertisement---

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் விளையாடலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதில் பிசிசிஐ தலைவர் கங்குலி சாதமான அளிக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்றே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ‘தற்போதைய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று ஐபிஎல் போட்டிகள் நடந்தால் அது உண்மையான இந்தியன் பிரீமியர் லீக்காக இருக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் எங்கள் அணி அதற்கு ஆதரவு அளிக்கும். போட்டிகளே நடக்காமல் இருப்பதற்கு, இந்திய வீரர்களை மட்டும் கொண்டு சிறப்பானது. இதுகுறித்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு பிசிசிஐ முடிவெடுக்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.  அவ்வாறே போட்டிகள் நடந்தாலும் பார்வையாளர்கள் இல்லாமல் காலியான மைதானத்தில்தான் நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஐபிஎல் நடக்கும் வாய்ப்புகள் குறைவு – அலுவலகத்தை மூடிய பிசிசிஐ !

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Mirnaa discussing Rajinikanth's daily routine.

வெள்ளை நிற உணவுகளுக்குத் தடை! ‘ஜெயிலர் 2’ செட்டில் ரஜினியின் சீக்ரெட் டயட்: மிர்பனா ஓபன் டாக்!

Editorial visual featuring distributor Tiruppur Subramaniam addressing production delays.

கருப்பு, சர்தார் 2 படங்களின் தாமதத்திற்குப் பின் உள்ள அதிர்ச்சி உண்மை: திருப்பூர் சுப்பிரமணியம் பளீச்!

Editorial visual featuring the trailer launch for Delivery Boy.

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர் ரிலீஸ்: அக்டோபர் 23-ல் தியேட்டர்களில் வெளியீடு!

Editorial visual featuring romance rumors between Divyabharathi and Umran Malik.

தமிழ்நாட்டில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு காதல் ரூமர்: கிரிக்கெட் வீரர் உமரன் மாலிக்கைக் காதலிக்கிறாரா திவ்ய பாரதி?

Editorial visual featuring Nivin Pauly's birthday update for BENZ.

நிவின் பாலியின் பிறந்தநாளில் வெளியான ‘பென்ஸ்’ பட மாஸ் அப்டேட்: லோகேஷ் கனகராஜ் கதையில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring music department changes for PocketNovel.

தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் திடீர் மாற்றம்: இளையராஜா விலகல்? ஜி.வி.பிரகாஷ் எண்ட்ரி!