---Advertisement---

உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு வந்தா ரத்தமா – எரிச்சலான மக்கள்

By Sri
Published on: April 3, 2020
suresh gopi recent news
---Advertisement---

இந்தியாவில் கொரோனாவால் 144 தடை உத்தரவை அமல்படுத்திய பிறகு மாநில அரசும், மத்திய அரசும் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலைமை உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அத்தியாவசிய தேவையை தவிர்த்து ஒரு சிலர் மட்டும் வெளியே சுற்றித் திரிவதாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை, காவல்துறையினர் பலர் மக்களிடம் கைகூப்பி வேண்டி வெளியே வர வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை கூறிக் கொண்டே வருகின்றனர். இன்னும் சில இடங்களில் போலீசார் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியே சுற்றித் திரிபவர்களை அடித்து வருகின்றனர் என்பதை நாம் ஊடகம் மூலம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

இந்நிலையில் மலையாள நடிகரான சுரேஷ்கோபி பெரும் சர்ச்சையான எச்சரிக்கையை அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மொழிகளில் நடித்து நடிகராகவும், அரசியல்வாதியாகவும், பிரபல தொகுப்பாளராகவும் பன்முக கலைஞராகவும் விளங்கியவர் நடிகர் சுரேஷ் கோபி.

அதன்படி போலீசார் மக்களை அடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், உத்தரவுகளை மதிக்காவிட்டால் அடித்துதான் ஆக வேண்டும் என்றும், இல்லை என்றால் ராணுவத்தை வரவழிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும், சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

actor suresh gopi
actor suresh gopi

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பலர் எதிர்ப்பதாகவும், சிலர் ஆதரிப்பதாகவும் அவ்வப்போது சோஷியல் மீடியா மூலமும், ஊடகங்கள் மூலமும் நாம் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் நடிகர் சுரேஷ் கோபியின் இந்த கருத்து சிலருக்கு சரி என்று பட்டாலும், பலதரப்பட்ட மக்களுக்கு மைண்ட் வாய்ஸில் “நீங்கள்லாம் நடிகரு வெளிய வந்தா உங்க கூட செல்பி எடுப்பாங்க, ஆனா நாங்க வந்த அடிப்பாங்க” என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில், உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு வந்தா ரத்தமா என்று எரிச்சலாக விமர்சித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!