---Advertisement---

எனக்கு தோனியோ கோலியோ ஆதரவு அளிக்கவில்லை – யுவ்ராஜ் சிங் சர்ச்சை கருத்து !

By Sri
Published on: April 1, 2020
---Advertisement---

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் தனக்கு கங்குலியைப் போல தோனியோ, கோலியோ ஆதரவு அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் அணிக்குள் போராடி நுழைந்தார்.

ஆனாலும் அவரால் முன்பு போல அணியில் நீடிக்க முடியவில்லை. அதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன். அதன் பின் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரும் தலைமையேற்றனர். ஆனால் என் நினைவுகள் கங்குலி காலத்திலேயே இருக்கின்றன.  அவரிடம் கிடைத்தது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமோ அல்லது கோலியிடமோ கிடைக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.