அஜித்தின் நேர்கொண்ட பார்வைப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் விமானப் பயணம் மேற்கொண்டதால் வீட்டில் தனிமைச் சிறையில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதற்கு முன்னதாக விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகியப் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலப் படுத்தியது. இந்நிலையில் இப்போது கொரோனா அச்சம் காரணமாக அவர் தனது வீட்டுக்குள்ளேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் மார்ச் 16 ஆம் தேதி அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் பின்னர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள் அவரைத் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைக் கூறியுள்ளனர். இதையடுத்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட நேற்று அவர் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ்வாக பேசினார்.
அப்போது வீட்டில் தனிமையில் இருப்பது வெறுப்பாக இருப்பதாகவும் அதனால் டிக்டாக் போன்ற செயலிகளை டவுன்லோட் செய்து வைத்துள்ளதாகவும் அதை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.







