---Advertisement---

ஒவ்வொரு மணிநேரமும் செல்பி எடுத்து போடனும்! அரசு உத்தரவிட்டது ஏன்?

By Sri
Published on: March 31, 2020
---Advertisement---

கர்நாடகாவில் கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை செல்ஃபி எடுத்து அனுப்பவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11000 ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளோடு இருப்பவர்கள் நாடு முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒழுங்காக இருப்பதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து கர்நாடக அரசு வீட்டுக்குள்ளேயே இருக்க வைப்பதற்காக ஒரு செயலியை உருவாக்கி உள்ளது. அதன்படி ஒவ்வொரு மணிநேரமும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் செல்பி எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்ற வேண்டும். அந்த செயலியில் ஜிபிஎஸ் வசதி இருப்பதால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத்தை அது கண்டுபிடித்துக்கொள்ளும். இதனால் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.  தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் இதுபோல செல்பி எடுத்து அனுப்பவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கொரோனா பரவலைத் தடுக்க அமிதாப் பச்சன் செய்த செயல் – ரசிகர்களுக்கும் வேண்டுகோள் !

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!

Editorial visual featuring the song release from Jolliya Iruntha Oruthan.

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!