தனியார் வங்கியான எஸ் பேங்க் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் ஒப்பந்தம் செய்திருந்த போன் பே நிறுவனம் இப்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
எஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி, மோசமான சூழலில் இருந்ததால் ரிசர்வ் பேங்க் அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. நிதி மோசடி செய்ததாக அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அந்த வங்கியோடு இணைந்து ஆன்லைன் யுபிஐ பரிவர்த்தணை செய்துவந்த போன் பே நிறுவனமும் பாதிக்கப்பட்டது. அதன் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் பாதித்தனர்.
இந்நிலையில் முக்கிய முடிவாக போன் பே நிறுவனம் தங்கள் பரிவர்த்தனைகளை இனிமேல் ஐசிஐசிஐ வங்கியோடு இணைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து போன் பே வாடிக்கையாளர்கள் இனி தடங்கல் இன்றி தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என நம்பிக்கை அளித்துள்ளது.







