சினேகா-பிரசன்னா தமிழ் திரையுலகில் இந்த ஜோடிக்கு அறிமுகம் தேவையில்லை. தனியார் விளம்பரங்களிலும் இவர்கள் ஜோடியாகவே நடிக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம். நட்சத்திர ஜோடியான இவர்களுக்கு விஹான் என்ற மகனுள்ளார்.
இந்நிலையில் சென்ற ஜனவரியில் நடிகை சினேகா – நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படம் தற்காப்பு கலையை மையமாக கொண்டது. இதில் சினேகா அவர்கள் கர்ப்பமாக இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் நடித்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
பின்பு சினேகாவிற்கு ஜனவரியில் பெண் குழந்தை பிறந்ததும், அதனை தொடர்ந்து பிரசன்னா “தை மகள் வந்தாள்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும், இதனை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பிறகு நீண்ட நாள் கழித்து, நடிகை சினேகா நேற்று தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
https://www.instagram.com/p/B9eMyB-ncRJ/?utm_source=ig_embed&utm_campaign=loading&_ga=2.175104481.2140333111.1583476210-1473693134.1576818447
அதில் “தாய், மகள், தங்கை – என் வாழ்க்கையில் இந்த பெண்கள் இல்லாமல் எதுவும் இல்லை” என்று உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.









