தென்னிந்திய மற்றும் இந்திய திரையுலகின் முன்னணிப் பெண் நட்சத்திரங்களில் ஒருவரான சாய்பல்லவி (Sai Pallavi), தனது அடுத்த பிரம்மாண்டத் திரைப்படமான ‘ஓம்’ (Om) படத்தின் உலகிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார்.
அதிரடி களம் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட ‘ஓம்’ திரைப்படத்தில் ‘நித்யா ரெட்டி’ (Nithya Reddy) என்ற கம்பீரமான காவல்துறை அதிகாரி (Police Officer) கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இதுவரை உணர்வுப்பூர்வமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற சாய்பல்லவி, முதன்முறையாக இத்தகைய முழுநீள அதிரடி போலீஸ் அவதாரத்தில் களம் இறங்குவது திரைப்பிரியர்களிடையே பெரும் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“Dhaaraalanga Cheppacchu” 😉
Today, 26.10.26
At 6 ‘o’ clock 🕕A glimpse of #SaiPallavi’s glimpse, for now 👋
#OM @Sai_Pallavi92 as #NithyaReddy https://t.co/h7511imPjE— Rajkumar Periasamy (@Rajkumar_KP) October 26, 2026
படக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ‘நித்யா ரெட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஆக்ஷன் அவதாரத்தில் மிரட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













