தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath & Sons). திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகி உலகளாவிய அளவில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது.
வெளியான முதல் வார இறுதியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் உலக அளவில் (Non-English Movies பிரிவில்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் நம்பர் 1 இடத்தைக் கைப்பற்றித் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸில் வெளியான ஒரு தென்னிந்தியப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் இதுவாகும். முதல் வார இறுதியில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் (5.5M+ Views) பெற்று இப்படம் சாதனை படைத்துள்ளது.
#VAS ruling 💥 pic.twitter.com/qXSmUPUF0v
— G.V.Prakash Kumar (@gvprakash) September 18, 2026
இதுமட்டுமின்றி, கடந்த 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு நெட்பிளிக்ஸில் அதிக முதல் வார இறுதிப் பார்வைகளைப் பெற்ற தமிழ் படம் என்ற பெருமையையும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளது. உலக அளவில் 4 நாடுகளில் முதலிடத்தையும், மொத்தம் 10 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி வெற்றியைக் கொண்டாடி வரும் சூர்யா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இதனைத் டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.













