தமிழ் சினிமாவில் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் எதார்த்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களைக் கவர்ந்த படம் ‘மூடர் கூடம்’.
இயக்குநர் நவீன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் நவீனுடன் இணைந்து ராஜாஜ், சென்ட்ராயன் மற்றும் ஓவியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு ‘மூடர் கூடம் 2 – மிஷன் பாசிபில்’ (Moodar Koodam 2 – Mission Possible) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றப் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. “The fools are back with a bigger bang this time” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அதே முன்னணி நட்சத்திரக் கூட்டணி இப்படத்திலும் தொடர்வது ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. டார்க் ஹியூமர் மற்றும் அதிரடியான ஆக்ஷன் கலந்த கலவையாக உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்டுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













