---Advertisement---

இன்ஸ்டாகிராமில் வெளியானது தல அஜித்தின் நோவா லைஃப்ஸ்பேஸ் விளம்பரம்! வைரலாகும் வீடியோ!

By Sri
Published on: August 3, 2026
Actor Ajith Kumar featured in the newly released Nova Lifespace Instagram commercial.
---Advertisement---

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘தல’ அஜித் குமார் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள விளம்பரப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘நோவா லைஃப்ஸ்பேஸ்’ (Nova Lifespace) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (NovaLifeSpace) அஜித்தின் புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த அஜித், இந்த ரியல் எஸ்டேட் பிராண்டிற்காகக் களமிறங்கியுள்ளதால், இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் அஜித் தோன்றும் இந்த விளம்பரக் காட்சி, தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. அஜித்தின் மாஸான லுக் மற்றும் அவரது பிரத்யேக ஸ்டைல் இந்த விளம்பரத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. திரைக்கு வெளியே இவ்வளவு நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது பிடித்தநடிகரை ஒரு விளம்பரத்தில் பார்ப்பதால் ரசிகர்கள் இந்த வீடியோவை மீண்டும்கண்டு மகிழ்ந்து வருவதுடன், இணையத்தில் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.