---Advertisement---

‘அன்பே டயானா’ மேடையில் கோபி செய்த கலாய்ப்பு! பெரம்பூர் பற்றி நடிகர் பாரி குறித்து வைத்திருக்கும் சீக்ரெட் என்ன?

By Sri
Published on: July 12, 2026
Parithabangal Gopi speaking at the Anbe Diana movie audio launch event.
---Advertisement---

சமூக வலைதளங்களில் தங்களது நகைச்சுவையான வீடியோக்களால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘பரிதாபங்கள்’ கோபி மற்றும் சுதாகர், எந்த மேடைக்குச் சென்றாலும் அங்கே ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கோபியின் பேச்சு அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

மேடையில் பேசிய கோபி, படத்தில் நடித்த பெரம்பூர் பாரி மற்றும் பிற நடிகர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பெரம்பூர் பாரி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.. அவருக்குப் படத்தில் வரும் ஒவ்வொரு நுணுக்கமான தகவல்களும் அத்துபடி. ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் செந்தில் ஒரு டைரியை வைத்திருப்பதையும், அதில் எல்லாவற்றையும் குறித்து வைத்திருப்பதையும் போல, பெரம்பூர் பற்றியும், படத்தில் நடித்தவர்கள் பற்றிய முழு விபரங்களும் ஒரு டைரியில் இருப்பது போல நடிகர் பாரியிடம்  இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். நன்றாகச் சொல்லுங்கள்” என்று ரசிகர்களிடமும், அங்கிருந்தவர்களிடமும் ஜாலியான முறையில் வேண்டுகோள் விடுத்தார். இவரின் இந்த எதார்த்தமான மற்றும் நகைச்சுவை கலந்த பேச்சு, அந்த நிகழ்வில் இருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  படைப்புச் சுதந்திரமும் தணிக்கை வாரியத்தின் புதிய கெடுபிடிகளும்

இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு படத்தைப் பற்றிய தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். நகைச்சுவை மற்றும் எதார்த்தம் நிறைந்த கோபியின் இத்தகைய பேச்சுக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!