---Advertisement---

டிராமா கம்பெனியுடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்; புதிய இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களம் இறங்கும் 2 டாப் நடிகைகள்!

Published on: June 1, 2026
Director Gowtham Sivaraman and music director Leon James attending Drama Company Production No 1 movie official launch pooja ceremony.
---Advertisement---

இப்போ இருக்குற சோசியல் மீடியா ட்ரெண்ட்ல ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரியான புதுமையான கதைக் களங்களோடு ஏகப்பட்ட புதிய தயாரிப்பு நிறுவனங்களும், இளம் திறமையாளர்களும் தமிழ் சினிமாவில் தங்களது கொடியை நாட்ட விறுவிறுப்பாக களம் இறங்கி வருகிறார்கள். அந்த வரிசையில், ‘டிராமா கம்பெனி’ (Drama Company) தங்களது அதிகாரப்பூர்வ முதல் தயாரிப்பாக ஒரு புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தற்பொழுது பூஜையுடன் மிகவும் நேர்த்தியாகத் தொடங்கியுள்ளது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த புதிய திரைப்படத்தை (#DramaCompanyProductionNo1) இளம் இயக்குநர் கௌதம் சிவராமன் எழுதி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு நம்ம தமிழ் சினிமாவின் திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவரான லியோன் ஜேம்ஸ் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார் என்பது கூடுதல் பலமாகும். “A new dream begins. A new journey unfolds” என்று குறிப்பிட்டு, தங்களது முதல் திரையுலகப் பயணத்தை இறைவனின் ஆசீர்வாதத்தோடும், நெருக்கமானவர்களின் வாழ்த்துகளோடும் ஒரு மங்களகரமான பூஜை விழாவோடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாகப் படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இந்த புதிய திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் “சிவராஜ்குமார்“, அபிஷன் ஜீவிந்த், ‘அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்’ மற்றும் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்துப் பிரபலமான இளம் நடிகை ஷிவானி நகாரம், யோகலட்சுமி மற்றும் கானா வினோத் உள்ளிட்ட பல திறமையான இளம் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கவுள்ளனர். முற்றிலும் மாறுபட்ட புதிய கதைக் களமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ள ஒட்டுமொத்த டெக்னீஷியன்கள் மற்றும் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றுவதில் செம எக்ஸைட்டிங்காக இருப்பதாக படக்குழுவினர் நெகிழ்ந்துள்ளனர்.

கௌதம் சிவராமன் இயக்கத்தில் லியோன் ஜேம்ஸ் கொடுக்கப்போகும் இந்த புதிய மியூசிகல் ட்ரீட் மற்றும் படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் அப்டேட்டுகளைப் குறித்த தகவல்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என்று எதிர்ப்பாக்கலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Thalapathy Vijay and veteran actor Indrans in an iconic sequence from Nanban movie stills.

தளபதி விஜய்யின் படத்தில் அந்த ஒரே ஒரு சீன்; மலையாள நடிகர் ஓப்பனாக உடைத்த பல வருட ரகசியம்!

Hollywood legendary actor and director Clint Eastwood celebrating his 96th birthday with Jigarthanda DoubleX movie references.

96-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் உலக சினிமா ஜாம்பவான்; ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் காம்போவை கொண்டாடும் ரசிகர்கள்!

Director Mari Selvaraj and music composer Isaignani Ilaiyaraaja collaborating for new movie M6 titled Manjanathi official poster.

வாழை பட இயக்குநரின் அடுத்த படைப்பு; இசைஞானியுடன் இணையும் புதிய படத்தின் தலைப்பு இதோ!

Actor Raghava Lawrence and producer Lokesh Kanagaraj Benz movie LCU connection poster with Kaithi and Leo references.

லோகேஷ் கனகராஜின் எல்சியு அதிரடி… கைதி மற்றும் லியோ படங்களுடன் இணையும் புதிய மெகா பட்ஜெட் படம்!

Actor Dhanush and director Vasanthabalan throwback picture discussing scripts at a cinema event.

அங்காடி தெரு கதையைக் கேட்டு தனுஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை; பல வருடங்களுக்குப் பின் வெளியான அதிரடி உண்மை

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!