---Advertisement---

11 வருட காத்திருப்புக்கு எண்ட் கார்டு..! அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி மேஜிக் கூட்டணியின் ‘விஜயம்’ அனௌன்ஸ்மென்ட்.. பைக் ரேஸர் லூக்கில் அதிரடி காட்டப்போகும் NP50 மாஸ் ஃபர்ஸ்ட் லுக்..!

By Sri
Published on: June 27, 2026
Actor Nivin Pauly in a rugged biker avatar for his 50th film Vijayam directed by Alphonse Puthren.
---Advertisement---

மலையாள திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தங்களது காதல் காவியமான ‘பிரேமம்’ படத்தின் மூலம் கட்டிப்போட்ட மாஸ் கூட்டணி மீண்டும் களம் இறங்கியுள்ளது.

நடிகர் நிவின் பாலி மற்றும் முன்னணி இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இருவரும் தங்களது முந்தைய பிளாக்பஸ்டர் கூட்டணியான ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ படங்களுக்குப் பிறகு, சுமார் 11 ஆண்டுகள் கழித்து புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். நிவின் பாலியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லான 50-வது திரைப்படமாக (NP50) உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு ‘விஜயம்’ (Vijayam) என அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு சிறந்த பயணமும் ஒரு சிறிய நம்பிக்கையுடனும், உங்களுடன் முதல் திருப்பத்தை எடுக்கத் தயாராக இருக்கும் ஒருவருடனும் தொடங்குகிறது.. என்னுடன் இந்த பயணத்தைத் தொடங்கிய நண்பனுடன் மீண்டும் இணைந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு நடிகர் நிவின் பாலி இந்த அறிவிப்பை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா கொச்சியில் உள்ள பத்மா தியேட்டரில் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வெளியாகி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நிவின் பாலி மிகவும் முரட்டுத்தனமான பைக் ரேஸர் மற்றும் பைக்கர் கெட்டப்பில் அசாத்தியமாக காட்சியளிப்பதால், இது ஒரு அதிரடியான ஆக்ஷன் அல்லது ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக இருக்கும் என்று சினிமா செய்திகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுவதுடன் அவரே எடிட்டிங் பணிகளையும் கவனிப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டான்சன் டோனி, சுனில் ராமடி மற்றும் நிவின் பாலியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பாலி ஜூனியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த ‘விஜயம்’ திரைப்படம், சமீபகாலமாக ஒரு அசாத்திய வெற்றிக்காக காத்திருக்கும் நிவின் பாலி மற்றும் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இருவருக்குமே பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!