---Advertisement---

விக்கிரவாண்டியில் 60 அடி அகலத்தில் பிரம்மாண்ட மேடை… தமிழக வெற்றி கழக மாநாட்டு பணி…!

By Sri
Published on: October 8, 2024
---Advertisement---

விக்கிரவாண்டியில் 60 அடி அகலத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பாக விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு மிகப் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு சார்பாக வரும் 27ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த நான்காம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிக்கு சென்னை திருவேற்காடு ஜேபி பந்தல் அமைப்பாளர் விஸ்வநாதன் ஒப்பந்தம் செய்து பணியை தொடங்கி இருக்கின்றார். மாநாட்டு திடலில் மாநாட்டு மேடைக்கு கிழக்கு நோக்கி ரயில்வே தண்டவாளத்திலிருந்து 200 மீட்டர் தள்ளி இரண்டு பைப்புகளை இறக்கி பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் ரயில்வே பாதையின் அருகே கட்சியினர் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கட்சி தலைவர் விஜய் தங்க தனி அறையும், விஐபிகள் தங்க தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு என்று தனியாக செட் அமைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்கள் நினைக்கும் சமயத்தில் உணவு அருந்த மாநாடு திடல் முழுவதும் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. திடலுக்குள் இருக்கும் கிணறுகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பது மட்டுமில்லாமல் அதை முழுவதும் இரும்பு தகரம் கொண்டு மறைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திறந்து வெளியில் மாநாடு நடத்த முடிவு செய்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!