---Advertisement---

வேகம் முக்கியம், அதைவிட விவேகமும் முக்கியம்… வெற்றி சாலையில் சந்திப்போம்- த.வே.க தலைவர் விஜய்…!

By Sri
Published on: October 4, 2024
---Advertisement---

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் தலைவர் விஜய்.

அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டை சந்திக்க இருக்கின்றார். அதன்படி வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த பந்தக்கால் நடும் பூஜை இன்று நடைபெற்ற முடிந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம்.

உங்களை நானும். என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும்.

இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.

இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா, அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா, இப்படிச் சொல்லும்போதே. ஓர் எழுச்சி உணர்வு. நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.

இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர்.

ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

நம் கழகம். மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ. அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன். இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்’ என்று தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Telugu actor Naveen Polishetty teams up with director Antony Bhagyaraj for a new movie produced by Mythri Movie Makers.

டோலிவுட்டில் அரங்கேறும் செம ட்விஸ்ட்..! ‘விஸ்வாசம்’ வசனகர்த்தா ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட பான்-இந்தியன் புராஜெக்ட்..!

Actor Ravi Mohan from Karathey Babu movie and Rocking Star Yash from Toxic movie set for a massive box office clash in Tamil Nadu.

தமிழ்நாட்டில் பயங்கர மோதல்..! யாஷின் ‘Toxic’ படத்திற்கு சவால் விடும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’.. ‘தனி ஒருவன்’ சென்டிமென்ட்டில் தியேட்டர்களை அதிரவைக்கப்போகும் மாஸ் கம்பேக் ரேஸ்..!

Actor Nivin Pauly in a rugged biker avatar for his 50th film Vijayam directed by Alphonse Puthren.

11 வருட காத்திருப்புக்கு எண்ட் கார்டு..! அல்போன்ஸ் புத்திரன் – நிவின் பாலி மேஜிக் கூட்டணியின் ‘விஜயம்’ அனௌன்ஸ்மென்ட்.. பைக் ரேஸர் லூக்கில் அதிரடி காட்டப்போகும் NP50 மாஸ் ஃபர்ஸ்ட் லுக்..!

Actor Dhanush from OM movie and Superstar Rajinikanth from Jailer 2 movie representing box office release date reshuffle.

ரஜினி படத்திற்காக பின்வாங்கும் தனுஷ்..! அக்டோபர் பந்தயத்தில் இருந்து தள்ளிப்போகும் ‘OM’.. ஜெயிலர் 2 கொடுத்த மாஸ் நெருக்கடி.. மாவீரன், கங்குவா வரிசையில் அரங்கேறும் மெகா ரிலீஸ் மாற்றம்..!

Actresses Meenakshi Chaudhary, Simran, and Raashi Khanna officially onboarded for director Ashwath Marimuthu next movie Dharman.

அடுத்தடுத்து மெகா ஜாக்பாட்..! STR51-ஐ தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்துவின் ‘தர்மன்’ படத்திலும் இணைந்த மீனாட்சி சவுத்ரி.. சிம்ரன் மற்றும் ராஷி கண்ணாவுடன் கைகோர்க்கும் ஆர்.கே.எஃப்.ஐ பிரம்மாண்டத் தயாரிப்பு..!

Actor Vishnu Vishal practicing boxing with gloves for his upcoming sports drama directed by Arunraja Kamaraj.

“3 தயாரிப்பு நிறுவனங்கள் ரிஜெக்ட் செஞ்சாங்க..!” சொந்த தயாரிப்பில் களமிறங்கும் விஷ்ணு விஷால்.. சார்பட்டா பரம்பரை கொடுத்த சவாலால் அருண்ராஜா காமராஜ் படத்திற்காக எடுத்த விஸ்வரூப முடிவு..!