நடிகர் விஷாலுக்கும், அனிஷா ரெட்டிக்கும் இடையே நடக்கவிருந்த திருமணம் நின்று போய்விட்டதாக செய்திகள் கசிந்து வருகிறது.
விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவுக்கும் இடையே காதல் உருவானதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி ஹைதராபாத்தில் அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. மேலும், வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி தனக்கும், அனிஷாவுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக விஷால் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கவிருந்த திருமணம் நின்று போய்விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. இதற்கு ஆதரமாக அனிஷா ரெட்டி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். எனவே, விஷாலின் திருமணம் நின்று போய்விட்டதா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.









