---Advertisement---

தீவிரமாக புதிய வீடு தேடும் அரவிந்த் கெஜ்ரிவால்… எதுக்கு தெரியுமா…?

By Sri
Published on: September 28, 2024
---Advertisement---

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது புதிய வீடு தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

டெல்லி மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் மீது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் வழக்கில் இவரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து பின்னர் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து ஜெயிலிலிருந்து கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.

மக்கள் தன்னை கலங்க மற்றவர் என கூறும் வரை முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் கெஜ்ரிவால் பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள அலுவலக வீட்டை காலி செய்யும் நிலையில் இருக்கின்றார்.

நவராத்திரி காலம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தொகுதி அமைந்துள்ள பகுதியில் தீவிரமாக வீடு தேடி வருகின்றார். அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் அலுவலகத்தை காலி செய்ய இருக்கின்றார். இதனால் மிகவும் தீவிரமாக புதிய வீடு தேடப்பட்டு வருகின்றது.

நியூ டெல்லியான அவரது தொகுதியில் பக்கத்தில் வீடு பார்க்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை காட்டி வருகின்றார். அவரது தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு அவர் முடிவு செய்து இருக்கின்றார். கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை அவருக்கு ஒதுக்க முன் வருவதாக அந்த கட்சியினை தெரிவித்து இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.