---Advertisement---

காலாண்டு விடுமுறை… சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை அறிவிப்பு…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அது மட்டுமில்லாமல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள்.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றது. சென்னைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் 395 பேருந்துகளும் நாளை முதல் 345 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 70 பேருந்துகளும், நாளை முதல் 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. மாதாவரத்தில் இருந்து இன்று 20 பேருந்துகள், நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களின் பயணத்திற்கு என்ற மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். இந்த சிறப்பு பேருந்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan meeting with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!