---Advertisement---

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வராதீங்க…  கட்டுப்பாடுகளை வெளியிட்ட நடிகர் விஜய்…!

By Sri
Published on: September 25, 2024
---Advertisement---

மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக்கூடாது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் கட்சி பொதுச் செயலாளர் புஜ்ஜிய ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

வீட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் பற்றி தொண்டர்களுக்கு கட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் தெரிவித்திருந்ததாவது ‘மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாகரிகமான முறையில் இருக்க வேண்டும்.

எந்த வகையிலும் நமது கட்சி தலைவர் விஜய் மீதுள்ள மரியாதை குறையாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாநாடுக்கு பெண்கள் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அவர்களின் பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு தயாராகி வருவோர் ஆங்காங்கே தங்குவதற்கு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

போக்குவரத்து விதிகளை பின்பற்றி மிகவும் பாதுகாப்புடன் தொண்டர்களை மாவட்ட நிர்வாகிகள் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது, மீறி மது அருந்தி விட்டு வருவோர் மாநாட்டு பந்தலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the Hollywood remake announcement of Vijay Sethupathi's Maharaja.

விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்: ஆஸ்கார் நாயகன் மேத்யூ மெக்கானகி நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!