---Advertisement---

அடுத்த முறை தங்கம் மிஸ்ஸே ஆகாது… பாராஒலிம்பிக் மாரியப்பன் உறுதி…!

By Sri
Published on: September 20, 2024
---Advertisement---

அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று தமிழக வீரர் மாரியப்பன் உறுதி அளித்து இருக்கின்றார்.

இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற 2024 ஆம் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய சார்பில் ஏகப்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை கைப்பற்றினார்கள். அதிலும் தமிழகத்தில் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பனுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இது பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் வெல்லும் மூன்றாம் பதக்கம் ஆகும். ஏற்கனவே பாரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கின்றார். தற்போது சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

சொந்த ஊரில் மாரியப்பனை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து அவரை வாழ்த்தினார். இதையடுத்து அவர் மக்கள் படைச்சூழ ஊருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பேசியவர் வெண்கலம் இந்த முறை வென்றிருந்த நிலையில் அடுத்த பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்திருந்தார். உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'ஜெயிலர் 2' விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் குறித்த செய்திப் படம்.

சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் என்னைப் பொருத்த முடியவில்லை: ஜெயிலர் 2 விழாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பேச்சு!

Editorial visual featuring dramatic film industry themes for Karathey Babu.

சென்சார் மற்றும் வணிக ரீதியிலான சிக்கல்களில் சிக்கிய ரவி மோகனின் ‘கராத்தே பாபு’: வெளியீட்டில் தொடரும் தாமதம்!

Editorial visual featuring advance booking hype for Jailer 2.

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Editorial visual featuring box office milestone themes for Mandaadi.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் திரையரங்குகளில் சாதனை படைக்கும் சூரியின் ‘மண்டாடி’: 30-வது நாளை எட்டிய திரையரங்க ஓட்டம்!

Editorial visual featuring film director and actor collaboration themes.

‘கான் சிட்டி’ படத்தைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்க்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்: கோலிவுட்டில் புதிய கூட்டணி!

ditorial visual featuring theatrical release themes for Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு: டிசம்பர் 4-ல் திரைக்கு வரும் சோசியல் பொலிட்டிகல் டிராமா!