---Advertisement---

தமிழ்நாட்டில் 34 சதவீதம் அதிகம்… வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை… வானிலை ரிப்போர்ட்…!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

தமிழகத்தில் இந்த முறை தென்மேற்கு பருவமழை 34 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை தெரிவித்து இருக்கின்றது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த பருவமழையின் போது தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பொழிவு பெறும். இந்நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது.

பல்வேறு மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்மேற்கு பருவமழையால் குறைவான மழை பொழிவை பெறும் மாநிலமான தமிழகத்தில் இந்த முறை அதிக அளவு மழை பெய்து இருக்கின்றது. அதன்படி ஜூன் 1-ம் தேதி தொடங்கிய மழை செப்டம்பர் 16ஆம் தேதி வரை 356 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது ,

இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழைப்பொழிவு 269.3 மில்லி மீட்டர் தான். எனவே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் 34 சதவீதம் அதிகமாக பெய்து இருக்கின்றது என்று வானிலை ரிப்போர்ட் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!

Director Cibi Chakaravarthi and actor Chiyaan Vikram

இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?