---Advertisement---

சாலைகளை சீரமைத்து கொடுங்க… சேற்றில் படுத்து உருண்ட பெண்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: September 16, 2024
---Advertisement---

சாலைகளை சீரமைத்துக் கொடுங்கள் என்று கூறி சேற்றில் படுத்து பெண் கும்பிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து உருண்டு கொண்டிருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் கிராமத்தில் இருக்கும் சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்டத்தை அந்த பெண் முன்னெடுத்து இருக்கின்றார்.

பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த அந்த வழியில் சென்றவர்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்கள். சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.

கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சியாக இது பார்க்கப்படுவதாக அந்த பெண் தெரிவித்து இருக்கின்றார். இருப்பினும் அவர் சேற்றில் புரண்டு கையெடுத்து கும்பிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'காதல் தேசம்' திரைப்படத்தின் 30 ஆண்டு நிறைவுச் சிறப்புச் செய்தி.

காதல் மற்றும் நட்பின் காவியம் ‘காதல் தேசம்’: வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஏ.ஆர். ரஹ்மானின் மாயாஜால இசையில் உருவான படத்தின் சுவாரஸ்யங்கள்!

Director Samuthirakani talking about the making of the movie Nadodigal.

‘நாடோடிகள்’ பட வாய்ப்பை முதலில் நிராகரித்த பிரபலங்கள்: இயக்குநர் சமுத்திரகனி பகிர்ந்த சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக் தகவல்கள்!

News graphic featuring a potential box office clash between Dhanush and Rajinikanth.

தனுஷ் vs ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் மோதல்!: ஒரே வாரம் வெளியாகும் ‘ஓம்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ – கோலிவுட்டில் வெடிக்கும் சூப்பர் ஸ்டார் சண்டை!

TVK President Thalapathy Vijay regarding upcoming election updates.

விஜய்யிடம் சீட் கேட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர்: தளபதி சொன்ன அதிரடி பதில் – தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பரபரப்பு தகவல்!

Late veteran actress Sowcar Janaki.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்த மூத்த நடிகையின் மறைவால் திரையுலகம் அதிர்ச்சி!

Actor Kamal Haasan traveling in economy class.

உண்மையான லெஜண்ட்! ஆடம்பரத்தைத் தவிர்த்து எகானமி கிளாஸில் பயணம் செய்த கமல்ஹாசன்: திரையுலகிற்கு முன்னோடியாக மாறிய உலகநாயகன்!