---Advertisement---

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்… 8 பேர் மீது பாய்ந்த வழக்கு… போலீஸ் அதிரடி…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

அருப்புக்கோட்டை பெண் எஸ்பி மீது தாக்குதல் நடத்திய எட்டு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த காளிகுமார் என்பவர் மினி வேன் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயத்தில் காளிகுமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலைக்கு மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரின் உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்.  அவரை தாக்க முற்பட்டார். இதை தடுக்க முயன்ற பிற போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார்கள். இதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!