சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவுதி அடைந்திருக்கிறார்கள்.
லண்டனிலிருந்து இன்று அதிகாலை 3:30 சென்னை வரும் அதே விமானம் மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தில் இன்று லண்டன் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கப்படவில்லை.
இதனால் அதிகாலை 5 30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டன. லண்டன் செல்லும் விமானம் நாளை அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து இன்று காலை 7:45 அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1:30 சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை 7.500க்கு வர வேண்டிய விமானம், மதியம் 1 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் என்று அடுத்தடுத்து நான்கு விமானங்கள் என்று திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்தது. இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன், அந்தமான் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் மற்றும் வருகை தரும் ஆறு விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தார்கள்.













