இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைஃபா நகரில் ஹெக்ட் என்ற அருங்காட்சியத்தில் 3500 ஆண்டுகள் பழமையான பானையை 4 வயது சிறுவன் தவறுதலாக தள்ளிவிட்டு உடைத்துள்ளார். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு குடும்பத்தினர் தனது குழந்தையுடன் அருங்காட்சியகத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்குள்ள பொருள்கள் அனைத்தையும் கண்டுகளித்து இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் பானையைப் பார்த்து சிறுவன் அதற்குள் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டு அதை பிடித்து இழுத்து இருக்கின்றார். அப்போது அந்தப் பானை கீழே விழுந்து சிதறியது. இருந்தாலும் அருங்காட்சியகம் இந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்கவில்லை. 4 வயது குழந்தையுடன் குடும்பத்தினர் மீண்டும் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எதுவும் இருக்காது என்று அருங்காட்சியகத்தின் மேலாளர் தெரிவித்திருக்கின்றார். மேலும் பொதுமக்கள் தொல்பொருள்களை நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கண்ணாடி தடைகள் இன்றி காட்சிக்கு வைக்கப்பட்டதாக அருங்காட்சியகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பானை பழைய நிலைமைக்கு கொண்டுவர நிபுணர் ஒருவரின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் மேலதிகாரி தெரிவித்து இருக்கின்றார். இந்தப் பானை பைபிள் காலத்தில் மன்னர் டேவிட் மற்றும் சாலமன் காலத்திற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
கிமு பத்தாம் நூற்றாண்டில் பண்டையை இஸ்ரேல் மற்றும் யூத ராஜ்ஜியத்தை ஆண்ட டேவிட் மன்னர் மற்றும் சாலமன் மன்னரின் ஆட்சிக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது எனவும் இது மது அல்லது ஆலிவ் ஆயில் எண்ணெய் போன்ற திரவங்களை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பானை கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு பழமையானது என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.













