---Advertisement---

பால் மற்றும் பால் பொருட்களில் இப்படி குறிப்பிடாதீங்க… FASSI வெளியிட்ட அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: August 23, 2024
---Advertisement---

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான FASSI பால் மற்றும் பால் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என்று வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றது. இது போன்ற விளம்பரங்கள் தவறான முறையில் வழிநடத்துவதாக FASSI தெரிவித்து இருக்கின்றது FASSI அமைப்பு.

இத்தகைய கருத்தாக்கங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006க்கு முரணாக இருக்கின்றது. இது தொடர்பாக FASSI மேற்கொண்ட ஆய்வில் ஏ1 மற்றும் ஏ2 என்று வேறுபாடு பாலில் உள்ள பீட்டா, கேசீன் பிரதத்தின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கின்றது.

மேலும் FASSI விதிமுறைகள் இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இத்தகைய வேறுபாடுகளை விளம்பரப்படுத்துவதை உணவுத்துறை வியாபாரம் செய்வோர் கைவிட வேண்டும் என்று FASSI உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பால் வகைகளை ஏ1 மற்றும் ஏ2 குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் FASSI  அறிவுறுத்தி இருக்கின்றது. இது குறித்து நடவடிக்கையை எடுப்பதற்கு அனைத்து நிறுவனங்களுக்கு அடுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக FASSI தெரிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க