---Advertisement---

கரும்பு தோட்டத்தில் வைத்து 10 வயது சிறுமி… தொடரும் பாலியல் வன்கொடுமை… கொடூர கொலை…

By Sri
Published on: August 23, 2024
---Advertisement---

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார்கள். சம்பவ தினத்தன்று சிறுமி அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் சிறுமியின் மாமா அவளை கண்டித்து இருக்கின்றார். அப்போது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் மகளை தேடி பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறிமியை தேடினார்கள். இதற்கு இடையில் நேற்று காலை ராம்நகர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். இது காணாமல் போன அந்த 10 வயது சிறுமி தான் என்பது தெரியவந்தது. உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

மேலும் சிறுமியை கடத்திச் சென்றதாக சந்தேகக்கப்படும் 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கின்றது. 10 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து பல மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க