---Advertisement---

சைக்கிள் ஒட்டிய சிறுமி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. பதற வைக்கும் வீடியோ…!

By Sri
Published on: August 20, 2024
---Advertisement---

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திசா பட்டேல் என்கின்ற சிறுமி தங்களுடைய சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். சைக்கிள் ஓட்டுக் கொண்டிருந்தபோது சிறிது நேரம் கழித்து அவர் முன்னே ஒரு கார் வந்தது. அந்த காரை பார்த்த சிறுமி தனது சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

ஆனால் அந்த சிறுமி சுதாகரித்து எழுவதற்குள் அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுனர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார்.

அதற்குள் சிறுமி உயிரிழந்து விடுகின்றார். கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க