---Advertisement---

தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் நகரம்… ரத்தன் டாட்டா உருவாக்கப் போகும் புது நகரம்…!

By Sri
Published on: August 19, 2024
---Advertisement---

இந்தியாவில் பிரபலமான தொழில் நகரம் என்றால் ஜாம் ஜெட் போர் டாட்டா குழுமத்தில் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரமாக ஜாம்ஷெட்பூர் இருந்து வருகின்றது. இந்த வரிசையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.

பல்வேறு நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்திக் கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை ஓசூரில் கட்டமைத்தது. இந்த ஆலை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற உள்ளது .உற்பத்தி துறையை விரிவுபடுத்தும் வகையில் டாடா குழுமம் இதே பகுதியில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டு இருக்கின்றது.

மேலும் பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதில் வழங்கப்பட உள்ளது. புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம் அதிகம் பேருக்கு இங்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க உள்ளது .

தமிழ்நாட்டு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இது குறித்து கூறும் போது வளர்ச்சியில் ஜாம்ஜெட்பூரை முந்தும் அளவிற்கு ஓசூரில் அதிக வசதிகள் இருக்கின்றன . மேலும் இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க