---Advertisement---

அரசு பேருந்தில் 16 வயது சிறுமியை… டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட ஐந்து பேர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: August 19, 2024
---Advertisement---

பஞ்சாப் மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி டெல்லி வழியாக மீண்டும் மொராதாபாத் பகுதிக்கு வந்தடைந்தார். மொராதாபாத்தில் இருந்து மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து மூலமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன்க்கு அதிகாலை 2.30 வந்திருக்கின்றார் ,

பேருந்தில் தனியாக இருப்பதை கவனித்த டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட கும்பல்கள் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் . பின்னர் 13ஆம் தேதி அதிகாலையில் சிறுமியை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். இதை அடுத்து பட்டேல் நகர் போலீஸ் சோதனை சாவடி அருகே அலங்கோலமான நிலையில் சிறுமி தவிர்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் சிறுமி  குறித்து குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவர் நல காப்பக குழுவினர் அந்த சிறுமியை மீட்டு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கிறார்கள், இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வாய்ப்பு இருக்காமல் இருந்து வந்திருக்கின்றார் சிறுமி. இதையடுத்து சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து அந்த சிறுமி தெரிவித்து இருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல காப்பகம் குழுவினர் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவலின் பெயரில் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் உண்மைகள் பெரிய வந்தது. இதையடுத்து டேராடூன் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் பஸ் டிரைவர், கண்டக்டர், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு பயன்படுத்திய பஸ்சை போலீசார் பரிமுதல் செய்து தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  முதலில் அந்த சிறுமி சரியான தகவலை கூறவில்லை. முதன்முறை விசாரித்த போது நான் மொறதாபாத்தை சேர்ந்தவர் என்று கூறினார்.

பின்னர் விசாரித்தபோது பாட்டியாலாவை சேர்ந்தவர் என்று கூறினார். மறுநாள் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட போது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதே தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அவரிடம் வாக்குமூலம் பெற்று சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவிகள் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்ட ஐந்து பெயர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க