ஆட்டோ கட்டணத்தை யார் கொடுப்பது என்ற தகராறில் நண்பனையே ஒரு நபர் கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த சையப் அலி மற்றும் சக்கன் அலி என்பவர்கள் நண்பர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் அண்மையில் மும்பைக்கு குடி பெயர்ந்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் இருவரும் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ கட்டணம் 30 ரூபாயை யார் கொடுப்பது என்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறி சையப் அலி சக்கன் அலியை கீழே தள்ளி இருக்கின்றார். அப்போது தலையில் அடிபட்டு சக்கன் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சையப் அலியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.







