---Advertisement---

கனடா அழகி போட்டி… பட்டத்தை தட்டி சென்ற கேரள பெண்… இந்தியப்பெண் என்ற பெருமை…!

By Sri
Published on: August 12, 2024
---Advertisement---

கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகி என்ற போட்டியில் கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த பெண் பட்டம் பெற்றுள்ள சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியின் இறுதி கட்டமானது இந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இன்றைய இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மனநலமிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம் என்பது குறித்த தலைப்பில் இந்த வருட அழகி போட்டி நடைபெற்றது.

இதில் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மிலி என்ற பெண் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்திருக்கின்றார். இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை மிலி பெற்றிருக்கின்றார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளப் பெண்களின் அழகிப் போட்டியில் இவர் தான் முதலிடம் பெற்றிருந்தார்.

பொறியாளரான மிலி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகின்றார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகி போட்டியில் கலந்து கொண்ட மிலி முதல் இடத்தை பெற்று இருக்கின்றார். மேலும் இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து அவர் இந்த போட்டியில் வலியுறுத்தியிருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க