---Advertisement---

ஒரு உப்புமா விலை இம்புட்டா..? சமூக வலைதள பக்கத்தில் விவாதத்தை கிளப்பிய விவகாரம்..!

By Sri
Published on: August 2, 2024
---Advertisement---

சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கின்றது உப்புமா.

ஆன்லைன் செயலி மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கே வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து வருகின்றது. இப்படி ஆர்டர் செய்பவர்களுக்கு உணவுகளின் விலையை பற்றி கவலை இல்லை.

ஹோட்டல்களில் உணவு வகைகளுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் செயலி மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது அதன் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அபிஷேக் கோத்ரி என்ற பயணர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஜோமேடோ நிறுவனம் மூலமாக உப்புமா ஒன்றை ஆர்டர் செய்திருக்கின்றார்.

அதன் விலை 120 ரூபாய் என்று வந்திருக்கின்றது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஹோட்டலுக்கு சென்று மெனுவில் உள்ள உப்புமா விலையை பார்த்த போது 40 ரூபாயாக இருந்தது. இதையடுத்து அவர் பில்லுடன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் ஜொமேட்டோ நிறுவனம் அபிஷேக்கிற்கு பதில் அளித்த போது எங்கள் செயலில் உள்ள விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார். மேலும் இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க