---Advertisement---

தண்ணீர் விழுந்து என்ன பிரயோஜனம்?…அது தான் தடை போட்டாச்சே…குற்றாலம் இன்று…

Published on: July 15, 2024
Courtallam
---Advertisement---

நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குளிக்க குவிந்தது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம். காலை முதலே வானம் மேகங்களால் சூழப்பட்டு இதமான சூழலே நிலவி வந்தது. அனைத்து பிரதான அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டியது தண்ணீர். பாறைகளின் இடுக்குகளிலினிடையே மேலிருந்து கீழ் நோக்கி விழுந்த அருவி நீரைப் பார்ப்பதே பேரானந்தமாக இருந்தது.

ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் ஆடிப்பாடி குளிக்க அலை மோதியது கூட்டம். இவர்களுக்கு நேற்று முழுவதும் இந்த இன்பத்தை வாரி வாரி வழங்கியது குற்றால அருவிகள். பொது மக்களும் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து தங்களது இன்பக்குளியல் ஆசையை தீர்த்துக் கொண்டனர். ஆனால் நள்ளிரவிலிருந்து அப்படியே நேர் எதிர்மறையாக மாறியது நிலை.

Falls
Falls (இன்று காலை எட்டு மணி நிலவரம்)

வானம் கருமேகங்களால் சூழப்பட்டு தாலாட்டும் தென்றல் காற்றின் சாரல் பெய்து சிலிர்க்க வைத்தது. அதிகாலை நாலு மணிக்கு குற்றாலத்தில் திடீரென பெய்யத்துவங்கியது மழை. இதானால் அருவிகளில் திடீர் வெள்ள்ப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடியது தண்ணீர். அபாய எல்லைகளை தாண்டி தண்ணீர் விழத்துவங்கியதால் இன்று காலை எட்டு மணி வரை அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

காலை எட்டு மணி வரை இதமான காற்று, அவ்வப்போது மழையோடு கலந்த சாரல் என இன்றைய சீசன் இதமானதாக இருந்தது. ஒரு புறம் பார்த்து ரசிக்கும்இன்பத்தை அள்ளிக்கொடுத்தாலும், மறுபக்கம் வெள்ளப்பெருக்கினால குளிக்கவிதிக்கப்பட்ட தடையினால் ஏமாற்றத்தை கொடுத்தது, குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகளை.  இந்த நிலை சீக்கிரத்தில் மாறும் குளிக்க அனுமதி கிடைத்து விடும் என காத்திருக்கிறது  கூட்டம் காலை எட்டு மணி நிலவரப்படி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!