---Advertisement---

அடி தூள்…உடனே வண்டிய ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்…குற்றாலம் சீசன் செம்மயாமே இன்னைக்கு…

Published on: July 13, 2024
Courtallam
---Advertisement---

வீக் என்ட் வந்துட்டே எங்கயாவது போகாலம்னு நினைக்கும் போதே இப்போதைய ட்ரெண்ட் குற்றாலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் நேற்று காலையில் குற்றாலத்தில் காணப்பட்ட சீசன் நிலவரத்தை பற்றி தெரிந்தால் இப்போ வேண்டாம் இன்னொரு நாளைக்கு போய்க்கலாம் என சொல்ல வைத்தது. ஆனால் நேற்று மாலையிலிருந்தே டோட்டலா சேஞ்ச் ஆனது சீசன்.

வீக் என்ட் சர்ப்ரைஸ் கொடுத்து விட்டது குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளுக்கு என்றே தான் சொல்லி ஆகனும் போல. நேற்று மாலை திடீரென அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத நேரத்தில் பெய்த மழையால் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டியது தண்ணீர். இதனால் ஐந்தருவியில் குளிக்க இன்று காலை தடை விதிக்கப்பட்டது. சராசரியாக விழுந்த தண்ணீரின் அளவை உறுதி செய்த பிறகே குளிக்க விடப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

Falls
Falls (இன்று காலை பத்து மணி நிலவரம்)

இன்று காலை பதினோருமணி நிலவரப்படி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. ஜிலுஜிலு தென்றல் காற்று வீசி வருவதால் இதமான நிலையே இருந்தது. வானம் கரு மேகங்களால் கூராப்பு போட்டதால் இதமான சூழல் காணப்பட்டது. பாறை இடுக்குகளில் வெள்ளி நிறத்தில் விழுந்த அருவியின் தண்ணீரை பார்த்தாலே ஆனந்தக்குளியலின் ஆவல் அதிகரித்து விடும்.

வார இறுதி நாட்கள் இன்றும் நாளையும் என்பதால் அதிகமான கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக இன்ரு காலை முதலே கூட்டம் அதிகரிக்கத்துவங்கிவிட்டது. சுற்றுலா பிரியர்கள் இனி டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம், உடனே வண்டிய ஸ்டார்ட் பண்ணிடலாம்ன்னு சொல்லுகின்ற மாதிரியே இருந்தது காலை பதினோரு மணி நிலவரம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!