---Advertisement---

ஆக்டிங்க்கு வேண்டாம் ஸ்டாப்பு…படத்தை பண்ணாதீங்க டிராப்பு…வித்யாசம் காட்டி விஜய் கவணத்தை ஈர்த்த ரசிகர்கள்…

Published on: June 19, 2024
vijay
---Advertisement---

அரசியல் கட்சி துவங்கியதுமே தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடப்போவதாக விஜய் அறிவித்து விட்டார். அவரது “கோட்” படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போதைக்கு செப்டம்பர் மாதம் 5ம்தேதி “கோட்” வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

இந்த நிலையில் ‘விஜய் – 69’ படம் ட்ராப் ஆகி விட்டது என செய்திகள் வரத்துவங்கியது. அரசியலில் தீவிரம் காட்ட போகின்றாராம் விஜய். 2026 தேர்தலை மனதில் கொண்டு செயல் பட உள்ளதாகவும் தெரிகிறது. குறைந்த கால அவகாசமே உள்ளதால் கட்சி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருக்கின்றாராம்.

actor vijay
actor vijay

இதற்கிடையில் மிகப்பெரிய அளவில் மாநாடை நடத்த விஜயின் ‘தமிழகம் வெற்றிக் கழகம்’ திட்டமிட்டுள்ளதாம். இதனை எல்லாம் கேள்விப்பட்ட ரசிகர்கள் சென்னை மாநகரில் சுவர் விளம்பரம் மூலமாக விஜய்க்கு தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தியிருக்கின்றார்களாம். விஜய் – 69 என எழுதி அதற்கு பக்கத்தில் டோன்ட் ஸ்டாப் ஆக்டிங் (Don’t Stop Acting) என சொல்லியிருக்கிறார்களாம்.

இது பற்றி பேசிய பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் விஜய் – 69 படத்தை கைவிடும் எண்ணமெல்லாம் இல்லை. அக்டோபர் மாதத்தில் படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என விஜய் தரப்பிலிருந்து உறுதியான தகவல் வந்துள்ளதாக சொல்லியிருக்கிறார்.

அதே போல விஜய் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கப்போவதில்லையாம், திருச்சியில் வைத்து பத்து லட்சம் இருக்கையுடன் பங்கேற்கும் விதமாக நடத்தி இப்போதே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லியிருக்கிறார் அந்தணன். ஹச். வினோக் படத்திற்கான வேலைகளை ஒரு பக்கம் விரைவாக பார்த்து வருகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!