---Advertisement---

சொக்க வைத்த அஜீத்…கிறங்கப்போன தேவயானி…ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிய காதல் கோட்டை?…

Published on: April 20, 2024
devayani ajith
---Advertisement---

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் திரையில் வலம் வந்து, கவர்ச்சி என்னும் ஆயுத்தை அதிகமாக கையில் எடுக்காமலேயே முன்னனி கதாநாயகியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் தேவயானி. தனது  படங்களை  அடித்து, புடித்தாவது உடனடியாக பார்த்து விட வேண்டும் என  முன்டியடித்துக்கொண்டு ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைத்தவர் இவர்.

“நீ வருவாய் என”யில் நடித்த போது, படத்தின் இயக்குனர் ராஜகுமரன் மீது  காதல் வயப்பட்டு, அவரையே திருமணம் செய்து கொண்டார் . சமீப காலமாக வெள்ளித்திரையில் திரையில் அதிகமாக தோன்றுவதில்லை.

\

ajith devayani
ajith devayani

முரளி, சரத்குமார், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னனி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றியை சினிமாவில் பார்த்தவர் இவர். “பஞ்ச தந்திரம்”, “தெனாலி” படங்களில்  கமல்ஹாசானுடன் நடித்திருந்தார். விஜய்யுடன் இவர் நடித்த  “ஃப்ரண்ட்ஸ்”, “நினைத்தேன் வந்தாய்” மெஹா ஹிட் ஆனது.

அஜீத்குமாரும், தேவயானியும் ஜோடியாக நடித்த “காதல் கோட்டை” சக்கை போடு போட்டு தியேட்டரை விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடித்து பல நாட்கள் ஓடியது. அஜீத்தோடு ரமேஷ் கண்ணா இயக்கத்தில் “தொடரும்” படத்திலும், தனது காதல் கணவர் ராஜகுமாரின் இயக்கிய “நீ வருவாய் என” படங்களிலும் நடித்திருக்கிறார்.

அஜீத்குமார் குறித்து பேசியிருந்த தேவயானி, அவரை முதல் முதலாக “கல்லூரி வாசல்” பட படப்பிடிப்பின்  போது தான் பார்த்தாராம். சிறிது நேரத்திலேயே அஜீத் குமார், தேவயானியோடு  ஆங்கிம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி, மாறி பேசியிருக்கிறார். இத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார் என ஆச்சரியம் ஏற்பட்டதோடும், அஜித்தை பார்த்ததும் அழகு பையன் என்றும் நினைத்தாராம் தேவயானி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!