---Advertisement---

ரஜினிக்கு மகளாக போகிறாரா ஸ்ருதி?…இன்னோரு சர்ப்ரைஸோட காத்திருக்கிறதா மெகா ட்ரீட்?…

Published on: April 15, 2024
rajini sruthi
---Advertisement---

தமிழ் திரையுலகை கலக்கி வரும் ஜாம்பவான்களாக  இருந்து வருவபவர்கள் ரஜினி,கமல். கலையுலகில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

ரஜினியின் திரை வாழ்வின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமான ஒத்துழைப்பை வழங்கியவர்.   ரஜினியின் வளர்ச்சியில் அதிக கவனமும் செலுத்தியவர். ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கி இருந்தும் வந்திருக்கிறார்.

இவர்கள்  இருவருக்கும் தனித்தனி ரசிகர் படையே இன்றும் உண்டு. அந்த காலத்தில் இவர்கள்  இருவரும் இணைந்து நடித்த படங்கள்  எல்லாம் அதிரடி ஹிட்.

ரஜினி கதாநாயகனாக  நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் கமலுடன் இணைந்து நடிப்பது நிறுத்தப்பட்டது.  இருவரும் மலை போன்ற வளர்ச்சி பெற்றுவந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து  கிட்டத்தட்ட  20 ஆண்டுகளுக்கு மேலிருக்கும்.

rajini kamal
rajini kamal                                                                                                              ரஜினி “வேட்டையன்”படத்திலும், கமல்ஹாசன் ஷங்கரின் “இந்தியன்2” படத்திலும் நடித்து வருகின்ரனர். லோகேஷ் கனகராஜுடன் தனது அடுத்த படத்தில் இணைய உள்ளார் ரஜினி. 

கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய “விக்ரம்”  படம் மிகப்பெரிய வெற்றியாக மாறியதால் ரஜினி – லோகேஷ் இனையும் படத்தின் வேலைகள் துவங்கும் முன்னரே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டுள்ளது.

இதனிடையே  ரஜினி – லோகேஷ்  படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ருதி சமீபத்தில் எடுத்த ஆல்பம் ஒன்றில் லோகேஷ் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து இவர்கள் இருவரை பற்றிய  கிசுகிசுக்கள் பற்றத்துவங்கியது.

இந்த சூழ்நிலையில்  ஸ்ருதிஹாசன்  ரஜினிக்கு மகளாக  நடிக்க உள்ளதாக வந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசும்  பொருளாக மாறிவிட்டது. இதைவிட  இன்னொரு  சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதே படத்தில் கமல்ஹாசனும் இணைய உள்ளாராம் .

அது நடந்தால் வெகு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் நடிப்பதால்  இருவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். அரசியலில் கால் வைத்துள்ள விஜய் தனது கடைசி பட அறிவிப்பை எப்பொழுது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இரு ஜாம்பவான்களும் இணைவார்களா? என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!