அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக எதிர்க்க கூடியவர் சீமான். சில நாட்களுக்கு முன் செருப்பை கூட தூக்கி காட்டியது நியாபகம் இருக்கலாம்.
ஆனால் சீமானின் தந்தை மறைந்தபோது அவரிடம் போனில் முதல்வர் துக்கம் விசாரித்தார்.
அதற்கு நெகிழ்ந்த சீமான் அதற்கு பின்னும் முதல்வரையும் திமுகவினரையும் விமர்சித்தார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சீமான் திருவள்ளூரில் பேசிக்கொண்டிருந்தபோது மயக்கமடைந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் சீமானை அழைத்து தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
இதற்கு சீமான் தனது நன்றியை முதல்வருக்கு சொல்லியுள்ளார்.
எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.













