---Advertisement---

முதல்வர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ ரோஜா சந்திப்பு

Published on: February 8, 2022
---Advertisement---

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, ஆந்திரா எம்எல்ஏ-வும், நடிகையுமான ரோஜா, அவரது கணவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, முதல்வரின் உருவம் பொறித்த சால்வையை இருவரும் பரிசாக வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது: எனது நகரி தொகுதி தமிழக எல்லையில் இருப்பதால், தொகுதி தொடர்பான விஷயங்களை முதல்வரிடம் தெரிவித்தோம். நான் அளித்த மனுவைப் படித்துவிட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

எனது தொகுதியில் தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளன. அவை மெட்ரிக் கல்வித் திட்டத்தின்கீழ் வருகின்றன. அதற்காக 1 முதல் 10-ம் வகுப்பு வரை 1,000 தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை அனுப்பி வைப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

திருத்தணி விஜயபுரம் பகுதிதமிழக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தொழிற்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திர தொழில் உட்கட்டமைப்புக் கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சாலை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் இருந்து கனரக வாகனங்கள் எளிதில் வரமுடியும். தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி நீண்ட நாட்களாகிவிட்டதால், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், நகரி, நெல்லூர், சத்தியவேடு, சித்தூர் பகுதிகளில் இருந்து தமிழ் தெரிந்த நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சில நேரம் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, கரோனா காலகட்டம் முடிந்ததும், உரிய வசதிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

என் கணவர் செல்வமணி, தென்னிந்திய நெசவாளர் சங்கத் தலைவராக உள்ளார். இங்கு வேலையின்றி நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர். நெசவுத் தொழில் மேம்பாட்டுக்காக அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை வழங்கி, ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு ரோஜா கூறினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Lead actor Pavish Narayan and actress Naga Durga in a breezy romantic pose from Love Oh Love movie official teaser cuts.

Romantic Comedy Riot: “காதல் என்னவோ இலவசம் தான்.. ஆனா மெயின்டனன்ஸ் செலவு அதிகம்!”… தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டீசர் அவுட்! ஜூலை ரிலீஸ் தேதியுடன் வெளியான அந்த 80 வினாடி மரண மாஸ் கலாட்டா!

Action director Hari alongside Telugu star Mass Maharaja Ravi Teja discussing an upcoming high energy commercial action screenplay.

Tollywood Direct Entry: “பிரசாந்த் படம் டிராப்… ஆனா அடுத்த ஆட்டம் தெலுங்குல!”… மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணையும் இயக்குநர் ஹரி! டோலிவுட்டையே மிரட்டப் போகும் அந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ மெகா கூட்டணி!

Actor Vishal meeting Tamil Nadu Chief Minister C Joseph Vijay warmly presenting the educational donation charts inside the Secretariat setup.

Emotional Reunion: “அப்போ லோயோலா காலேஜ் டார்லிங்.. இப்போ நம்ம மாநிலத்தோட சிஎம்!”… முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து உருகிய விஷால்! பொன்னாடை, சால்வையை மறுத்த தளபதிக்கு விஷால் கொடுத்த நெகிழ்ச்சியான சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

Actor-director Dhanush alongside his eldest son Yatra Dhanush planning his upcoming mass commercial acting debut under RTake Studios production banner.

Kollywood Next-Gen Launch: “தாத்தாவின் பில்லா, முரட்டுக்காளை வைப்!”… மகன் யாத்ராவை மாஸ் ஹீரோவாக களம் இறக்கும் தனுஷ்! #D55 தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் மெகா கூட்டணி!

Official announcement banner showing actor Atharvaa Murali and composer Thaman confirming actor Dhanush vocals for Vaama Vaama single from Idhayam Murali.

Romantic Musical Blast: “தனுஷ் வாய்ஸ்ல நாளைக்கு ஒரு மரண மாஸ் லவ் சாங் லோடிங்!”… அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக தமனுடன் கைகோர்த்த அசுரன்! ரிலீஸ் தேதியுடன் வெளியான செம்ம போஸ்டர்!

High production values template layout tracking actor Dhanush D55 movie target set announcement poster from Wunderbar Films.

Mega Combo Reveal: “டார்கெட் செட் பண்ணியாச்சு!”… ‘அமரன்’ இயக்குநருடன் தனுஷ் மோதும் #D55 மெகா அப்டேட் தேதி இதோ! ஜூன் 18-ல் வெளியாகப்போகும் அந்த மிரட்டலான ரகசியம் என்ன? வுண்டர்பார் வெளியிட்ட மாஸ் போஸ்டர்!