---Advertisement---

நாசா மூலம் விண்ணில் ஒலிக்க உள்ள இளையராஜா பாடல்

Published on: January 19, 2022
---Advertisement---

70களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து  பல சாதனைகளை செய்தவர் .

சிம்பொனி இசையமைத்தது முதல் பல சாதனைகளை செய்து, ஏராளமான ரசிகர்களுக்கு இசை விருந்து இன்றும் படைத்து வருபவர். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட இளையராஜாவுக்கு கிடைத்த கெளரவங்கள் அதிகம்.

அந்த வகையில் ஒரு புதிய கெளரவமாக நாசா உதவியுடன் விண்ணில் ஏவப்பட உள்ள உலகின் எடை குறைவான சேட்லைட் மூலம் இசைஞானி இளையராஜாவின் பாடலை விண்வெளியில் ஒலிக்க விட இருக்கின்றனர்.

இந்த சேட்லைட்டை தயாரிக்கும் குழு இளையராஜாவிடம் பேசி ஒப்புதல் வாங்கி ஒரு பாடலை வாங்கி சேட்டிலைட்டுடன் இணைத்து அனுப்பி விண்வெளியில் ஒலிக்க விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.