கடந்த 2004ல் வெளியான அய்யா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன் தாரா முதல் படமே வெற்றிப்படம். தொடர்ந்து இவர் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்தார் அதன் பிறகு இவரின் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.
அதன் பிறகு கஜினி, வல்லவன், வில்லு, பில்லா , யாரடி நீ மோகினி என பல படங்களின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ஒரு கட்டத்தில் தனிப்பட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மாயா , இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார் அந்த படங்களும் வெற்றி பெற்றது.இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியும் இவரோடு ஒட்டிக்கொண்டது.
இன்றும் இவர் அசைக்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இன்று நவம்பர் 18 இவரின் பிறந்த நாள் இவரை வாழ்த்துவோம்.








