கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் தயாரிப்பான கோவேக்ஸின், கோவி ஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் பலர் . இருப்பினும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதோர் உள்ளனர்.
ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதோரும் உள்ளனர்.
இவர்கள் 12 கோடி பேர் உள்ளனராம்
79 சதவீதம் பேர் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பிரசாரத்தில் தகுதியான மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2வது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.
பெரு நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள், கோவிட் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். இங்கு மக்கள் அதிகளவில் வருவர். கொவிட் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக நாம் நினைக்க கூடாது. உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனாவில் 80 சதவீதத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியும், கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கின்றன. கோவிட் தடுப்பூசி மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. கோவிட்-19 தடுப்பூசி என்ற பாதுகாப்பு கவசத்துடன், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.













