கன்னட சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். தற்போது இவரும் மறைந்து விட்டார் என்பதுதான் கர்நாடக மக்களின் ஏற்றுக்கொள்ள முடியாத சோகம்.
இவர் மறைந்த பிறகு இவரின் நினைவிடத்துக்கு பலரும் சென்று வருகின்றனர். இவரின் அண்ணன் சிவராஜ்குமாரை நேரில் சந்தித்து இவரது மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடிகர் சிவகார்த்திகேயனும் சிவராஜ்குமாரை நேரில் சந்தித்து விசாரித்ததோடு புனித் ராஜ்குமாரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Sivakarthikeyan paid tribute to Puneeth Rajkumar. pic.twitter.com/rrjCoMAI5w
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 1, 2021









