முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜயபாஸ்கர். இவர் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்திலேயே இவர் வீட்டில் மத்திய அரசால் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக ரெய்டு நடத்தப்பட்டது.
தற்போது மாநில அரசால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இவரது வீடு, மதுரையில் இவருக்கு சொந்தமான இடங்கள் இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
விஜயபாஸ்கரின் மகளுக்கு சில நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்ததால் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இது தெரியாமல் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.
பின்பு மாஸ்க் அணிந்து சோதனை செய்தனர்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த விஜயபாஸ்கர், எனக்கு ஆதரவு தெரிவித்த ஈ.பி.எஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை, சோதனைகள் தொடரும் நிலையில் முழுமையாக நான் பேசவிரும்பவில்லை என கூறி இருக்கிறார்.







