மனைவியின் பெயரை கவிஞர் சினேகன் தனது கையில் பச்சை குத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எழுத்தாளர் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அண்மையில் நிறைவடைந்த ‘கல்யாண வீடு’ என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சைகுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் கணவரின் பெயரை கன்னிகாவும் பச்சைகுத்திக் கொண்டுள்ளார்.
அவர்கள் இருவரும் பச்சை குத்திக்கொண்ட வீடியோவை கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.







