தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கியாரா அத்வானி.இவர் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து விட்டார். தற்போதும் ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வரும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய்யின் 66வது படமாக உருவாக இருக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைத்திபள்ளி இயக்குகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி என பலரை தேர்வு செய்து கிட்டத்தட்ட கியாரா அத்வானியை உறுதி செய்து விட்டார்களாம்.
அப்படி கியாரா அத்வானி உறுதியாகிவிட்டால் தமிழில் முதன் முதலில் கியாரா அத்வானி நடிக்கும் படமாக அது அமையும்.







